தமிழ்நாடு

சென்னைப் பல்கலை.யில் இன்று வேலைவாய்ப்பு முகாம்

DIN

சென்னைப் பல்கலைக்கழகம் சார்பாக சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் சனி மற்றும் ஞாயிறுக்கிழமை காலை 10 மணி முதல் 4 மணி வரை நடைபெற உள்ளது. 
பல்கலைக்கழக மாணவர்களுக்கு மட்டுமின்றி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள இணைப்புக் கல்லூரி மாணவர்களின் நலனுக்காகவும் இந்த முகாம் நடத்தப்படுகிறது.
பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெறும் இந்த முகாமில் பங்கேற்க www.unom.ac.in  என்ற இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் அல்லது காலை 8.30 மணி முதல் மாலை 4 மணி வரை நேரடியாகப் பதிவு செய்தும் முகாமில் பங்கேற்கலாம். ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறும் நிறைவு விழாவில், தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பணிக்கான ஆணை வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு 044 - 2539 9518 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளஅறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT