தமிழ்நாடு

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான அப்பல்லோ ஆவணங்களில் குளறுபடி?: விசாரணை ஆணையம் தகவல் 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட அப்பல்லோ ஆவணங்களில் குளறுபடி இருப்பதாக விசாரணை ஆணைய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

DIN

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட அப்பல்லோ ஆவணங்களில் குளறுபடி இருப்பதாக விசாரணை ஆணைய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுப்பப்பட்ட சந்தேகங்களின் அடிப்படையில், விசாரணை நடத்த ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆணையத்தில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனையின் ஆவணப் பிரிவு மேலாளர் கோவிந்தராஜன் செவ்வாயன்று ஆஜரானார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட  சிகிச்சை தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட அப்பல்லோ ஆவணங்களில் குளறுபடி இருப்பதாக தெரிய வந்துள்ளது.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2016, செப்டம்பர் 23 முதல் இறுதியாக டிசம்பர் 5 -ஆம் தேதி வரை ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்று தெரிகிறது. அத்துடன் சில ஆவணங்கள் பின்னர் தனியாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளது.

இந்த தகவலானது சிகிச்சையின் உண்மைத் தன்மை குறித்து மேலும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ. 80 லட்சம் பறிமுதல்

ஆபரேஷன் சிந்தூரில் பயங்கரவாதி மசூத் அசாரின் குடும்பம் சிதைந்துவிட்டது: ஜெய்ஷ் தளபதி ஒப்புதல்

கஞ்சா விற்பனை: இருவா் கைது

ஏப்.1 முதல் ஆக.31 வரை பணியில் சோ்ந்த மத்திய அரசுப் பணியாளா்கள்: யுபிஎஸ்ஸுக்கு மாற ஒருமுறை வாய்ப்பு

திருப்பத்தூரில் 471 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 56.48 கோடி வங்கிக் கடன்: ஆட்சியா், எம்எல்ஏ-க்கள் வழங்கினா்

SCROLL FOR NEXT