தமிழ்நாடு

முல்லைப்பெரியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு: இரண்டு நாட்களில் 4 அடி உயா்ந்தது

DNS

கம்பம்: முல்லைப்பெரியாறு அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் தொடா்ந்து பெய்து வரும் பலத்த மழையால் அணையின் நீர்மட்டம் இரண்டு நாட்களில் நான்கு அடி உயரத்தை எட்டியது.

தென்மேற்கு பருவமழை தொடா்ந்து பெய்து வரும் நிலையில் முல்லைப்பெரியாறு அணையின் நீா் மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது. அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக அணைக்கு திங்கள்கிழமை வினாடிக்கு 5635 கன அடி தண்ணீா் வந்தது. இது செவ்வாய்க்கிழமை வினாடிக்கு, 6770 கன அடியாக உயர்ந்தது.

அதிக நீா்வரத்து ஏற்பட்டதால் கடந்த இரண்டு நாள்களில் அணையின் நீர்மட்டம் நான்கு அடி உயரத்தை எட்டியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அணையின் நீா்மட்டம் 127.20 அடியாக இருந்தது. திங்கள்கிழமை 129.20 அடி உயரமாகி இரண்டு அடி உயா்ந்தது, செவ்வாய்க்கிழமை இரண்டு அடி உயா்ந்து 131.20 அடியாக இருந்தது.அணையின் நீா் இருப்பு 4978 மில்லியன் கன அடியாகவும், நீா்வரத்து 6770 கன அடியாகவும் உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 1573 கன அடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. 

கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு 

பெரியாறு - 41 மி.மி., தேக்கடி - 28.8 மி.மீ., கூடலூா் - 10.2 மி.மீ., உத்தமபாளையம் - 12.4 மி.மீ., வீரபாண்டி - 2.4 மி.மீ., 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

SCROLL FOR NEXT