தமிழ்நாடு

50 அரசு பள்ளிகளில் விரைவில் இலவச வைஃபை வசதி

DIN

தமிழகத்தில் முதல்கட்டமாக 50 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச வைஃபை வசதி வழங்கப்படவுள்ளது.
தமிழகத்தில் உள்ள, கல்வியில் பின்தங்கிய, 13 மாவட்டங்களில் உள்ள, 366 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு, ரூ. 9.06 கோடி மதிப்பில், இலவச வைஃபை வசதியை ஏற்படுத்த, அரசுஒப்புதல் அளித்தது. இதில் முதல்கட்டமாக, 50 அரசு மேல் நிலைப்பள்ளிகளில் ரூ.1.23 கோடி செலவில், வைஃபை வசதியை வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: முதல்கட்டமாக 50 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இந்தச் சேவையை வழங்க, "டெண்டர்' கோரப்பட்டுள்ளது. விரைவில் ஒப்பந்த நிறுவனம் இறுதி செய்யப்பட்டு, இரண்டு மாதங்களில் பள்ளிகளுக்கு இலவச வைஃபை வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன என்றனர் அவர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

SCROLL FOR NEXT