தமிழ்நாடு

காவிரி பாசன மாவட்டங்களில் அணை கட்ட முடியாது: முதல்வருக்கு அன்புமணி கண்டனம் 

DIN

காவிரி பாசன மாவட்டங்களில் அணை கட்ட முடியாது என்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவிரி பாசன மாவட்டங்கள் சமவெளிப் பகுதிகள் என்பதால் அங்கு தடுப்பணைகள் கட்ட முடியாது என்று கூறியுள்ளார். முதல்வர் பதவியில் மட்டுமின்றி பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருக்கும் அவரின் நீர் மேலாண்மை குறித்த அறியாமை அதிர்ச்சியளிக்கிறது. 
காவிரி பாசன மாவட்டங்கள் சமவெளிப் பகுதிகள்தான். ஆனால், சமவெளிப்பகுதிகளில் பெரிய அளவிலான அணைகளைத்தான் கட்ட முடியாதே தவிர, தடுப்பணைகளைக் கட்டுவதற்கு எந்தத் தடையும் இல்லை. திருச்சியை அடுத்த கம்பரசன்பேட்டையில் காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்டுப்பட்டுள்ளது. அதனால், அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து, பாசனத்துக்கும் குடிநீர்த் தேவைக்கும் மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கிறது.
பொதுப்பணித் துறையை இரண்டாகப் பிரித்து நீர்வள மேலாண்மைக்கு தனி அமைச்சகத்தை உருவாக்க வேண்டும். இரு துறைகளையும் அவை சார்ந்த புரிதல் உள்ளவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். 
அனைத்து ஆறுகளிலும் 5 கி.மீ தொலைவுக்கு ஒரு தடுப்பணை கட்டும் திட்டத்தை ஐந்தாண்டு காலத் திட்டமாக வகுத்துச் செயல்படுத்த வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

SCROLL FOR NEXT