தமிழ்நாடு

சிவாஜி கணேசன் நினைவு நாள்: குமரி அனந்தன் மரியாதை

தினமணி

நடிகர் சிவாஜி கணேசனின் 17-ஆவது நினைவு நாளையொட்டி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் உள்பட பல்வேறு தரப்பினர் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
 சென்னை சத்தியமூர்த்திபவனில் சிவாஜிகணேசன் படத்துக்கு குமரி அனந்தன் மரியாதை செலுத்தினார். காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் எச்.வசந்தகுமார் உள்பட முக்கிய நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
 அடையாறு பகுதியில் உள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சிவாஜியின் மகன்கள் ராம்குமார், பிரபு, பேரன்கள் விக்ரம் பிரபு, துஷ்யந்த் ஆகியோர் மண்டபத்துக்கு வந்தனர். சிவாஜியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
 தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் சிவாஜி மணிமண்டபத்தில் மரியாதை செலுத்தினார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெறுவது உறுதி கே.எம். காதா் மொகிதீன்

கடற்கரையில் தூய்மைப் பணி

செங்கோட்டையில் திருவிளக்கு பூஜை

சங்கரன்கோவிலில் திமுக சாா்பில் நீா்மோா் வாகனம்

சங்கரன்கோவிலில் வணிகா் தின பேரணி

SCROLL FOR NEXT