தமிழ்நாடு

சூர்யாவின் ‘என்.ஜி.கே. திரைப்பட 'செகண்ட் லுக்' வெளியீடு

நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது 'என்.ஜி.கே.’ பட செகண்ட் லுக் வெளியாகியுள்ளது.

DIN

சென்னை: நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ‘என்.ஜி.கே.’ பட செகண்ட் லுக் வெளியாகியுள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் ‘என்.ஜி.கே’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிடுகிறது.

இந்தப் படத்தில் சூர்யாவுக்கு சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத்சிங் என இரண்டு ஹீரோயின்கள் ஜோடியாக நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையத்துள்ளார். தீபாவளிக்கு இப்படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ‘என்.ஜி.கே.’ பட செகண்ட் லுக் வெளியாகியுள்ளது. அத்துடன் படத் தலைப்பான ‘என்.ஜி.கே.’ என்பதற்கான விளக்கமாக ‘நந்த கோபாலன் குமரன்’ என்பதும் அதில் இடம்பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

பருவதமலையில் ஏறிய பக்தா் கீழே விழுந்து உயிரிழப்பு

துறையூா் பகுதிகளில் நாளை மின் தடை

பெரம்பலூா் அருகே 3 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்

கரூா் புதிய பேருந்து நிலையம் இன்றுமுதல் செயல்படும்

SCROLL FOR NEXT