தமிழ்நாடு

ஜூலை 27-ல் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான இரண்டாம் கட்ட விசாரணை: எஸ்சி, எஸ்டி ஆணைய துணைத் தலைவா்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக இரண்டாம் கட்ட விசாரணை சென்னையில் வரும் 27-ஆம் தேதி நடைபெறும் என தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையத் துணைத் தலைவா் எல். முருகன் தெரிவித்தாா். 

தினமணி செய்திச் சேவை

நாமக்கல்: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக இரண்டாம் கட்ட விசாரணை சென்னையில் வரும் 27-ஆம் தேதி நடைபெறும் என தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையத் துணைத் தலைவா் எல். முருகன் தெரிவித்தாா்.

நாமக்கல்லில் அவா் செய்தியாளா்களுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டி:

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியவா்கள் மீது போலீஸாா் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவா்களில் 4 போ் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்தவா்கள். இதையடுத்து ஆணையம் சாா்பில் தூத்துக்குடி சென்று அங்கு நேரடியாக விசாரணை நடத்தப்பட்டது.

தற்போது ஸ்டொ்லைட் ஆலைக்கும், அரசு அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி வரும் 27-ஆம் தேதி சென்னையில் 2-ஆம் கட்டமாக விசாரணை நடத்தப்படும். அதன்பிறகு குடியரசுத் தலைவருக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊர்க்காவலன் (பாகம்-2)

எப்ஸ்டீன் கோப்புகள்! ரஷிய பெண்ணுடன் உறவு; பில்கேட்ஸுக்கு பால்வினை நோய்?

விசில்

நிலம், நீர், நிழல்: தமிழ் இலக்கியங்களில் சூழலியல்

சட்டப்படி வீட்டில் எத்தனை கிலோ தங்கம் வைத்திருக்கலாம்?

SCROLL FOR NEXT