அறிஞர் அண்ணாவின் மறைவிற்கு பின், 1969-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி கருணாநிதி திமுகவின் தலைவராக பொறுப்பேற்றார் கருணாநிதி. அன்று முதல் இறுதி மூச்சு வரை அவர் திமுகவின் தலைவராக இருந்துள்ளார்.
பல இடர்பாடுகளுக்கு இடையே தமது கட்சியை கட்டுக்கோப்பாக வைத்திருந்தார் கருணாநிதி. போலவே அவர் போட்டியிட்ட அனைத்துத் தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ளார். உலகளவில் இது ஒரு சாதனை, இவ்வாறு தொடர் வெற்றி பெற்ற ஒரே மனிதர் கலைஞர் கருணாநிதி மட்டுமே. 5 முறை முதல்வராக இருந்துள்ளார் கருணாநிதி என்பதும் சிறப்பு.
கிட்டத்தட்ட பாதி நூற்றாண்டு தன்னிகற்ற தலைவராய் திகழ்ந்த கருணாநிதி, தனது ஆட்சிக் காலத்தில் மக்களுக்குப் பல அரிய திட்டங்களையும், இலவச திட்டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.
இலவச வண்ணத் தொலைக்காட்சி திட்டம்:
1, 62, 59,526 குடும்பங்களுக்கு இலவச வண்ண தொலைக்காட்சி வழங்கப்பட்டன. இதை செயல்படுத்த ரூபாய் 3742,47,59, 000 அரசுக்கு செலவானது
இலவச எரிவாயு அடுப்பு:
661 கோடி செலவில் 29 லட்சம் குடும்பங்களுக்கு இலவச எரிவாயு அடுப்பு வழங்கப்பட்டது
ஏழை விவசாய தொழிலாளர்களுக்கும், ஏழை விவசாயிகளுக்கும் இலவச நிலம்:
1,79,000 ஏழை விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் ஏழை விவசாயிகளுக்கு இலவசமாக 2,12,995 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது.
இலவச வீட்டுமனைகளுக்கான பட்டா:
8,29.236 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது
கலைஞர் காப்பீடு திட்டம்:
இந்தத் திட்டத்தில் கீழ் இதுவரை 1,34,000 குடும்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2,55,744 நபர்கள் இந்த திட்டத்தில் பயனடைந்துள்ளனர். 667 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.
கலைஞர் இலவச வீட்டுமனைத் திட்டம் (கான்கிரீட் வீடுகள்):
இத்திட்டத்தின் படி ஒரு வீட்டை கட்டமைப்பதற்கு 75,000 ரூபாய் வரையில் மானியம் வழங்கப்பட்டது. இதுவரை 1082 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது
(ஆதாரம்: முரசொலி, மார்ச் 28, 2011)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.