தமிழ்நாடு

எஸ்வி சேகருக்கு முன்ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு

DIN

பெண் பத்திரிகையாளர்கள் மீது அவதூறு கருத்து பரப்பியதாக குற்றம்சாட்டி எஸ்வி சேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால், காவல் துறையினர் அவரை கைது செய்யவில்லை. இதையடுத்து, அவர் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அது நிராகரிக்கப்பட்டதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். 

இந்த வழக்கில் ஜூன் முதல் வாரம் வரை அவரை கைது செய்யக்கூடாது என்றும் தமிழக அரசு இந்த வழக்கில் பதலளிக்குமாறும் உத்தரவிட்டிருந்தது. 

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் உச்சநீதிமன்றம் எஸ்வி சேகருக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தது. மேலும், அவர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. 

இதனால், அவருடைய கடைசி வாய்ப்பும் தற்போது பறிபோனது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT