முகப்பு
தமிழ்நாடு

சுற்றுச் சூழலை மாசுபடுத்துவோரை தண்டிக்க உள்ளாட்சி மன்றங்களுக்கு அதிகாரம்: நீதிபதி பி.ஜோதிமணி வலியுறுத்தல்

சுற்றுச் சூழலை மாசுபடுத்துவோரைத் தண்டிக்க உள்ளாட்சி மன்றங்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்று நீதிபதி பி.ஜோதிமணி வலியுறுத்தினார்.

தமிழ்நாடு

சுற்றுச் சூழலை மாசுபடுத்துவோரை தண்டிக்க உள்ளாட்சி மன்றங்களுக்கு அதிகாரம்: நீதிபதி பி.ஜோதிமணி வலியுறுத்தல்

சுற்றுச் சூழலை மாசுபடுத்துவோரைத் தண்டிக்க உள்ளாட்சி மன்றங்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்று நீதிபதி பி.ஜோதிமணி வலியுறுத்தினார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:13 PM
பகிர்:

சுற்றுச் சூழலை மாசுபடுத்துவோரைத் தண்டிக்க உள்ளாட்சி மன்றங்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்று நீதிபதி பி.ஜோதிமணி வலியுறுத்தினார்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - இந்திய தொழில் வர்த்தக சம்மேளனம் ('ஃபிக்கி'), சவீதா கல்வி நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் உலக சுற்றுச் சூழல் தின கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் முதுநிலை துணைத் தலைவர் விக்னேஷ்குமார் வரவேற்றார். தேசிய பசுமைத் தீர்ப்பாய நீதித்துறையின் முன்னாள் உறுப்பினரும், நீதிபதியுமான பி.ஜோதிமணி பேசியது:
சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் தொழில் துறை வளர வேண்டும். மக்களும் சுற்றுப்பகுதிகளைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். பிளாஸ்டிக்குக்கு 100 சதவீத தடை என்பது சாத்தியமற்றதாகத் தெரிந்தது. சுற்றுச்சூழலைப் பாதிக்காமல், பிளாஸ்டிக் கழிவுகளை செல்வமாக மாற்றுவது குறித்து சிந்திக்க வேண்டும். சாலைகள் அமைப்பதில் பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தும் வழிமுறைகளைக்க கண்டறிய வேண்டும்.
வெளிநாடுகளில் 60 சதவீதம் பிளாஸ்டிக் சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது. அந்த சாலைகள் நன்றாக உள்ளன. பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துவதற்கும் அழிப்பதற்கும் சரியான விதிமுறைகளை வகுக்க வேண்டும். சட்டத்தை மீறுவோர், சுற்றுச்சூழலை மாசுபடுத்துவோரைத் தண்டிக்க உள்ளாட்சி மன்றங்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். செயல்திறன் மிக்க துணை விதிகள் உருவாக்கப்படாததால், சட்டத்தை பல விஷயங்களில் முழுமையாக அமல்படுத்த முடியவில்லை என்றார் நீதிபதி ஜோதிமணி.
இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின் தமிழகத் தலைவர் அருண் உள்ளிட்டோர் பேசினர்.
கின்னஸ் சாதனைக்காக விருது: பி.எஸ்.அப்துர் ரகுமான் கிரெசன்ட் பல்கலைக் கழகத்தில் உலக தண்ணீர் தினத்தன்று 'மறுசுழற்சி இலச்சினை' வடிவாக்க நிகழ்ச்சி இந்தியன் எக்ஸ்பிரஸ் பங்கேற்புடன் நடத்தப்பட்டது. இதில் 1,726 மாணவர்கள் பங்கேற்றனர். இது கின்னஸ் சாதனையானது. அதற்கான சான்றிதழை நீதிபதி ஜோதிமணி, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தமிழ்நாடு பிரிவு பொது மேலாளர் சித்தார்த் சொந்தாலியாவிடம் வழங்கினார். இச்சாதனையில் பங்கேற்ற பி.எஸ்.அப்துர் ரகுமான் கிரெசன்ட் பல்கலைக் கழக டீன் ஜவஹர், நிப்பான் பெயின்ட் நிறுவனத்தின் (டெக்கரட்டிவ்) தலைவர் மகேஷ்குமார் ஆகியோருக்கும் கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →