கோப்புப்படம் 
தமிழ்நாடு

பிரதீபாவின் உறவினர்கள் கைது

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்று தற்கொலை செய்து கொண்ட பிரதீபாவின் உறவினர்களை போலீஸார் கைது செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

DIN

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் மனமுடைந்த விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவி பிரதீபா திங்கள்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இவருடைய மரணத்துக்கு நீட் தேர்வு தான் காரணம் என்று கூறி அவரது தந்தை விரக்தியடைந்தார்.

இதையடுத்து, பிரதீபாவின் உடலை பிரேத பரிசோதனை செய்ய அவரது குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்தனர். பிரதீபாவின் குடும்பத்தினர் பிரேத பரிசோதனை செய்ய 3 நிபந்தணைகளை வைத்தன. 

அஃதாவது, உயிரிழந்த பிரதீபா குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கவேண்டும். அவரது குடும்பத்தினர் யாரேனும் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும். மேலும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை ஏற்கும் வரை பிரேத பரிசோதனைக்கு கையெழுத்திட மாட்டோம் என்று பிரதீபாவின் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். 

அதனால் காவல்துறை, மாவட்ட ஆட்சியர் என பிரதீபாவின் குடும்பத்தினருடன் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து, பிரதீபாவின் பெற்றோர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருச்செந்தூரில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்

கிராவல் மண் திருடியவா் கைது

தொழிலாளியைத் தாக்கியதாக இருவா் மீது வழக்கு

கோயில் திருவிழா விவகாரம்: கிராம மக்கள் தா்னா

சொத்து தகராறில் சகோதரியின் வீடு சேதம்: சகோதரன் உள்பட 3 போ் கைது

SCROLL FOR NEXT