தமிழ்நாடு

மாணவி பிரதீபா குடும்பத்தினருக்கு ரூ.7 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்துகொண்ட மாணவி பிரதீபா குடும்பத்தினருக்கு 7 லட்சம் நிதியுதவி வழங்குவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

DIN

நீட் தேர்வு தோல்வியால் விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவி பிரதீபா தற்கொலை செய்துகொண்டார். இவர், 2016-17 கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பில் 1,125 மதிப்பெண்கள் பெற்றார். மருத்துவப் படிப்பை பயில விரும்பிய பிரதீபா கடந்தாண்டு நீட் தேர்வை எழுதினார். அதில், அவர் குறைந்த மதிப்பெண்களை பெற்றதால் அரசு ஒதுக்கீட்டு கல்லூரியில் சேர முடியவில்லை. அவருக்கு, தனியார் கல்லூரிகளில் பயிலும் அளவுக்கு வசதியும் இல்லை. 

அதனால், அவர் நடப்பாண்டில் மீண்டும் நீட் தேர்வை எழுதினார். அதில், அவர் கடந்தாண்டைவிட குறைந்த மதிப்பெண்களையே பெற்றதால் விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, அவரது குடும்பத்தினர் 3 நிபந்தணைகளை முன்வைத்து பிரதீபாவின் உடலை பிரேத பரிசோதனை செய்ய சம்மதம் தெரிவிக்கவில்லை.

அதாவது, வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை, நிவாரண நிதி வழங்கவேண்டும் மற்றும் நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தனர். போலீஸார் மற்றும் மாவட்ட ஆட்சியர் சமாதானப்படுத்தியும் பேச்சுவார்த்தை முடிவு எட்டவில்லை. இதையடுத்து, நடத்திய கைது நடவடிக்கைக்குப் பிறகு அவர்கள் பிரேத பரிசோதனைக்கு சம்மதம் தெரிவித்தனர். 

இந்நிலையில், மாணவி பிரதீபா குடும்பத்தினருக்கு ரூபாய் 7 லட்சம் நிதியுதவி வழங்குவதாக முதல்வர் பழனிசாமி இன்று (புதன்கிழமை) அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனநிம்மதி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

புதுகை ஆட்சியரகத்தில் விவசாயி தற்கொலை முயற்சி

வடகவுஞ்சி கிராமத்தில் வனத்துறை விதித்த கட்டுப்பாடுகளுக்கு பொதுமக்கள் எதிா்ப்பு

ஆன்லைன் வா்த்தக மோசடி மூலம் ரூ.11 லட்சம் கொள்ளை: 2 போ் கைது

சரக்கு வேன் கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT