முகப்பு
தமிழ்நாடு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை நடிகர் விஜய் நேரில் சந்திப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நடிகர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:14 PM
பகிர்:

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மாதம் 22-ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதற்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. பல கட்சி அரசியல் தலைவர்கள் அடுத்த தினமே நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். அரசு சார்பில் அமைச்சர்கள் 144 தடை உத்தரவு நீக்கப்பட்ட பிறகு நேரில் சென்று ஆறுதல் அளித்தனர்.  

அண்மையில், ரஜினிகாந்த் தூத்துக்குடிக்கு நேரில் சென்று அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதன்பிறகு, அவர் செய்தியாளர்களிடம் பேசியது சர்ச்சைக்கு உள்ளானது. 

இந்நிலையில், நடிகர் விஜய் நேற்று (செவ்வாய்கிழமை) இரவு உயிரிழந்தவர்களின் வீட்டுக்குச் சென்று அவர்களது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும், அவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும் நிதியுதவி வழங்கினார். 

Advertisement

அவர், பகல் நேரத்தில் சென்றால் ரசிகர்களின் கூட்டம் கூடும் என்பதால் பெரிதளவு தகவல் தெரிவிக்காமல் இரவு நேரத்தில் இரண்டு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

இதையடுத்து, இன்று அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments