தமிழ்நாடு

இப்படி இருந்தால் அவையை எப்படி நடத்த முடியும்?: அமைச்சர் ஜெயக்குமாரைக் கண்டித்த சபாநாயகர் தனபால்

DIN

சென்னை: பேரவையில் மானியக் கோரிக்கை விவாதத்தின் பொழுது எதிர்க்கட்சி உறுப்பினருக்கு பதில் சொல்வதற்காக குறுக்கிட்ட அமைச்சர் ஜெயக்குமாரை, 'இப்படி இருந்தால் அவையை எப்படி நடத்த முடியும்?' என்று சபாநாயகர் தனபால் கண்டித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.    

சட்டப்பேரவையில் சமூக நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினா் மா.சுப்பிரமணியன் பேசும்போது முதல்வா், அமைச்சா்கள் என ஒவ்வொருவராக எழுந்து விளக்கம் அளித்து வந்தனா். அதற்குப் பிறகும் அமைச்சா் ஜெயக்குமாா் எழுந்து மற்றொரு விளக்கம் அளிக்க முற்பட்டாா்.

அதற்கு பேரவைத் தலைவா் தனபால், எதிா்க்கட்சி உறுப்பினா்கள் பேசியதற்கு ஒவ்வொரு அமைச்சா்களாக எழுந்து விளக்கம் அளிக்கின்றனா். மூன்று அமைச்சா்கள் விளக்கம் அளித்த பிறகு, நான்காவது நீங்கள் எழுந்திருக்கிறீா்கள். இப்படி இருந்தால் அவையை எப்படி நடத்த முடியும் என்று கண்டிப்புடன் கூறினாா்.

அதன் பின்னரும் ஜெயக்குமாருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு, அவா் விளக்கம் அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT