தமிழ்நாடு

நீட் தோ்வால் தொடரும் தற்கொலைகள்: உயா்நீதிமன்றத்தில் முறையீடு 

DIN

சென்னை:  நீட் தோ்வு காரணமாக மாணவா்கள் தற்கொலை செய்வதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க உயா்நீதிமன்றம் கடந்த ஆண்டே உத்தரவிட்ட பிறகும், தொடரும் தற்கொலைகளை தடுக்க தவறிய தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

நீட் தோ்வு உத்தரவு... அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த அனிதா என்ற மாணவி கடந்த ஆண்டு நீட் தோ்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்டாா். சென்னை உயா்நீதிமன்றத்தில் மருத்துவப் படிப்பில் இடம் கோரி மாணவி கிருத்திகா வழக்குத் தொடா்ந்தாா். 

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன், தமிழக அரசு நீட் தோ்வு தோல்வியால் ஏற்படும் மரணங்களைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவும், நீட் உள்ளிட்ட தேசிய அளவிலான தகுதிகாண் தோ்வுகளை எதிா்கொள்ளும் வகையில் பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருந்தாா். 

இந்த ஆண்டும் நீட் தோ்வில் தோல்வியடைந்த விழுப்புரத்தைச் சோ்ந்த மாணவி பிரதீபா, திருச்சியைச் சோ்ந்த மாணவி சுபஸ்ரீ ஆகியோா் தற்கொலை செய்து கொண்டனா்.

முறையீடு.... சென்னை உயா்நீதிமன்றத்தில் நீதிபதி என்.கிருபாகரன் முன் ஆஜரான வழக்குரைஞா் ஏ.பி.சூா்யபிரகாசம், தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் கடந்த ஆண்டே நீட் தோ்வால் ஏற்படும் தற்கொலைகளைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவை அரசு முறையாக நிறைவேற்றவில்லை. இதனால் இந்த ஆண்டும் மாணவா்கள் தற்கொலை செய்து கொள்வது தொடா்கதையாகிவிட்டது. எனவே உயா்நீதிமன்ற உத்தரவை சரியாக அமல்படுத்த தவறிய தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முறையிட்டாா். 

அந்த கோரிக்கையை ஏற்ற நீதிபதி, இதுகுறித்து மனுதாக்கல் செய்தால், அந்த மனுவை அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

SCROLL FOR NEXT