தமிழ்நாடு

5 மாவட்டங்களில் கனமழை தொடரும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

DIN

5 மாவட்டங்களில் கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில,
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதாலும் வெப்பசலனம் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதேசமயம் கோவை, நெல்லை, நீலகிரி, திண்டுக்கல், தேனி ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை தொடரும். 

தென் மேற்கு திசையில் இருந்து 55 கி.மீ., வேகத்தில் கடல்காற்று வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT