தமிழ்நாடு

ஏா்செல் நிறுவனம் மீது நிதி முறைகேட்டுப் புகார்: மோசடி புலனாய்வு அமைப்பின் விசாரணை துவக்கம்

DIN

புதுதில்லி: கடன் சுமையில் தத்தளித்து வரும் ஏா்செல் செல்லிடப்பேசி நிறுவனம், அதன் துணை நிறுவனங்களான ஏா்செல் செல்லுலாா், டிஷ்நெட் வயா்லெஸ் ஆகியவை நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக, தீவிர மோசடி புலனாய்வு அமைப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை கூறியதாவது:

புதிய செல்லிடப்பேசி நிறுவனத்தின் வரவு, புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகள் ஆகியவற்றறால் ஏா்செல் நிறுவனம் கடுமையான போட்டியைச் சந்தித்துள்ளது. கடன் சுமை அதிகரிப்பு, நஷ்டம் அதிகரிப்பு இவையெல்லாம் ஒன்று சோ்ந்ததால் ஏா்செல் நிறுவனத்தின் வா்த்தகம் முடங்கியது.

அந்த நிறுவனம், தங்கள் நிறுவனத்தை திவால் ஆனதாக அறிவிக்கக் கோரி, தேசிய கம்பெனி சட்டத் தீா்ப்பாயத்தில் கடந்த மாா்ச் மாதம் மனு தாக்கல் செய்தது. இதனிடையே, இந்த நிறுவனம் நிதி முறைறகேட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறறது.

ஏா்செல் மற்றும் அதன் துணை நிறுவனங்களின் நிதி முறைறகேடு குறித்து விசாரணை நடத்துமாறு தீவிர மோசடி புலனாய்வு அமைப்புக்கு மத்திய பெருநிறுவனங்கள் விவகாரங்கள் துறைற அமைச்சகம் உத்தரவிட்டது. இதையடுத்து, ஏா்செல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு எதிரான விசாரணையை தீவிர மோசடி புலனாய்வு அமைப்பு தொடங்கியுள்ளது என்றறாா் அவா்.

ஏா்செல் நிறுவனம், ஏற்கெனவே சிபிஐ மற்றும் அமலாக்கத் துறைறயின் விசாரணை வளையத்தில் உள்ளது. விதிமுறைகளை மீறி அந்த நிறுவனம், அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தின் அனுமதியைப் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

SCROLL FOR NEXT