தமிழ்நாடு

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்தது: குளிக்க தடை நீக்கம்

DIN

குற்றாலம் பேரருவி மற்றும் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை வியாழக்கிழமை நீக்கப்பட்டது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
குற்றாலம் பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்துவரும் சாரல் மழையின் காரணமாக அவ்வப்போது பேரருவி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. வெள்ளப்பெருக்கு குறைந்தவுடன் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
புதன்கிழமை பேரருவி மற்றும் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து குளிக்க தடைவிதிக்கப்பட்டிருந்தது. தண்ணீரின் சீற்றம் தணிந்ததையடுத்து, ஐந்தருவியில் புதன்கிழமை இரவும், பேரருவியில் வியாழக்கிழமை காலையும் தடை நீக்கப்பட்டது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT