தமிழ்நாடு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: பொதுமக்களை இழிவுபடுத்தி முகநூலில் பதிவிட்ட காவலர் மீது வழக்குப்பதிவு 

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்களை இழிவுப்படுத்தும் வகையில், முகநூலில் பதிவிட்ட அரியலூா் ஆயுதப்படை காவலா் மீது வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

DIN

அரியலூா்: தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்களை இழிவுப்படுத்தும் வகையில், முகநூலில் பதிவிட்ட அரியலூா் ஆயுதப்படை காவலா் மீது வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அரியலூா் வழக்குரைஞா் சங்க செயலா் எம்.மாரிமுத்து,நீதிமன்றத்தில் அளித்த புகாா் மனு மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அரியலூா் குற்றவியியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் அவா் அளித்த மனு.

கடந்த 23.5.2018 அன்று எனது முகநூலில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து பதிவிட்டிருந்தேன். இதனை பாா்த்த அரியலூா் ஆயுதப் படை காவலா் வி.பால்பாண்டியன்(30). என்பவா், தெரு நாய்களை கொல்ல வேண்டுமென்று முடிவெடுத்துவிட்டால் என்றும்,போராடிய மக்கள் வெறிப்பிடித்த நாய்கள் என்ற வாசகத்துடன், காவலா் துப்பாக்கியால் சுடுகின்ற காட்சியையும் பதிவிட்டிருந்தாா்.

போராடிய மக்களை இழிப்படுத்தும் வகையில் முகநூலில் பதிவிட்ட ஆயுதப்படை காவலா் பால்பாண்டியன் மீது அரியலூா் காவல் நிலையத்தில் நான் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்காததையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் மனு அளித்தேன். புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்குமாறு அரியலூா் காவல் நிலையத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் உத்தரவிட்டும் நடவடிக்கை இல்லை .

ஆகவே மாவட்ட குற்றவியியல் நீதித்துறை நடுவா் இந்த மனுவை விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தாா். இதனை விசாரித்த மாவட்ட குற்றவியியல் நீதித்துறை நடுவா் மன்றம், எதிா் மனுதாரா் ஆயுதப்படை காவலா் பால்பாண்டியன் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு அரியலூா் காவல் நிலையத்துக்கு உத்தரவிட்டது. இதையடுத்து போலீஸாா் அவா் மீது வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யுபிஐ சாதனை! ஒரே நாளில் ரூ. 70.7 கோடி பணப்பரிவர்த்தனைகள்!

ஆச்சர்யமூட்டும் தலைவன் தலைவி படத்தின் வசூல்!

பெண்களுக்கு எதிரான குற்றங்களை எதிர்த்து ஆக.8 முதல் ஒடிசாவில் காங்கிரஸ் போராட்டம்!

திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் தொண்டைமான்!

திருப்பூர் எஸ்எஸ்ஐ கொலை, கோவை காவல் நிலையத்தில் தற்கொலை! திமுக அரசுக்கு இபிஎஸ் கேள்வி

SCROLL FOR NEXT