தமிழ்நாடு

குற்றாலத்தில் ஆர்ப்பரிக்கும் அருவிகள்: போக்குவரத்து நெரிசலால் பயணிகள் அவதி

DIN

குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஆங்காங்கே ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசல் காரணமாக சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.
குற்றாலத்தில் நிகழாண்டு சீசன் தொடங்கிய நாள்முதல் தொடர்ந்து சாரல் மழை, மிதமான வெயில், குளிர்ந்த காற்று, அவ்வப்போது அருவிகளில் வெள்ளப்பெருக்கு என களைகட்டி வருகிறது.
தற்போது பண்டிகை கால விடுமுறை, தொடர் விடுமுறை நாள்கள் என்பதால், குற்றாலத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிக அளவில் இருந்தது. பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து பிரதான அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. ஆர்ப்பரிக்கும் தண்ணீரில் அவர்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். 
போக்குவரத்து நெரிசல்: சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கேற்ப வாகனங்களின் எண்ணிக்கையும் அதிக அளவில் இருந்தது. குறிப்பாக, ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலம் பகுதியில் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஐந்தருவியிலிருந்து வாகன நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் பகுதி வரையிலும் வெள்ளிக்கிழமை நீண்டவரிசையில் வாகனங்கள் நின்றன. இதனால் சுற்றுலாப் பயணிகள் சுமார் 2 கி.மீ. தொலைவு நடந்தே சென்று அருவிப் பகுதியை அடைந்தனர். பழைய குற்றாலம் அருவியிலும் இதே நிலையே நீடித்தது.
போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில். கூடுதலாக காவலர்களை நியமித்து போக்குவரத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

SCROLL FOR NEXT