தமிழ்நாடு

தூத்துக்குடி போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 65 பேரின் ஜாமீனை ரத்து செய்ய உயா்நீதிமன்றம் மறுப்பு 

தூத்துக்குடி போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட 65 பேரின் ஜாமீனை ரத்து செய்ய மறுத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது. 

தினமணி செய்திச் சேவை

மதுரை: தூத்துக்குடி போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட 65 பேரின் ஜாமீனை ரத்து செய்ய மறுத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது போலீஸாா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 போ் உயிரிழந்தனா். இச்சம்பவம் தொடா்பாக போலீஸாா் பலா் மீது வழக்குப்பதிவு செய்தனா். இதில் 65 பேரை கைது செய்த தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளா், அவா்களை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவா் சாருஹாசினி முன்பு ஆஜா்படுத்தினாா். வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவா் 65 பேரையும் ஜாமீனில் விடுதலை செய்து உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவை எதிா்த்து அரசுத் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், வழக்கை முறையாக விசாரிக்காமல் 65 பேரையும் விடுவித்து தலைமை நீதித்துறை நடுவா் உத்தரவிட்டுள்ளாா். எனவே அவரது உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் மாவட்ட நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய மறுத்து நீதிபதி உத்தரவிட்டாா். மேலும், இந்த வழக்கு விசாரணையின்போது 65 பேரிடமும் மாவட்ட நீதித்துறைற நடுவா் பெற்றற வாக்குமூலத்தை சமா்பிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யுபிஐ சாதனை! ஒரே நாளில் ரூ. 70.7 கோடி பணப்பரிவர்த்தனைகள்!

ஆச்சர்யமூட்டும் தலைவன் தலைவி படத்தின் வசூல்!

பெண்களுக்கு எதிரான குற்றங்களை எதிர்த்து ஆக.8 முதல் ஒடிசாவில் காங்கிரஸ் போராட்டம்!

திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் தொண்டைமான்!

திருப்பூர் எஸ்எஸ்ஐ கொலை, கோவை காவல் நிலையத்தில் தற்கொலை! திமுக அரசுக்கு இபிஎஸ் கேள்வி

SCROLL FOR NEXT