தமிழ்நாடு

ஒதுக்கப்பட்ட பழைய புத்தகத்தை புரட்டிப் பார்த்திருக்கிறார் கமல்: ராகுல், சோனியா சந்திப்பு குறித்து பொன்னார் 

DIN

நாகர்கோவில்: ஒதுக்கப்பட்ட பழைய புத்தகத்தை புரட்டிப் பார்த்திருக்கிறார் கமல் என்று ராகுல் மற்றும் சோனியா உடனான  கமலின் சந்திப்பு குறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

தனது மக்கள் நீதி மய்யம் கட்சிக்கான முறையான அங்கீகாரம் பெறுவது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் பேசுவதற்காக கமல்ஹாசன் புதனன்று தில்லி சென்றார். சந்திப்புக்குப் பிறகு புதன் மாலை அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து சோனியா காந்தியையும் அவர் வியாழன் காலை சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில் ஒதுக்கப்பட்ட பழைய புத்தகத்தை புரட்டிப் பார்த்திருக்கிறார் கமல் என்று ராகுல் மற்றும் சோனியா உடனான  கமலின் சந்திப்பு குறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

நாகர்கோவிலில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவரிடம் ராகுல் மற்றும் சோனியா உடனான கமலின் சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது:

பழைய புத்தகத்தினை புரட்டிப் பார்த்திருக்கிறார். அதுவாவது பயனுள்ள புத்தகமா என்று பார்த்தால் இத்துப் போன புத்தகம். கருத்தில்லாத புத்தகம். பயன் இல்லை என்று மக்களால் ஒதுக்கப்பட்ட புத்தகம். அதனைப் போய் புரட்டிப் பார்த்திருக்கிறார்.

இதனால் அந்த புத்தகத்திற்கும் பயன் இல்லை. திரும்ப திரும்ப புரட்டிக் கொண்டிருப்பவருக்கும் பயன் இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரகுரு கல்லூரியில் விருது வழங்கும் விழா

எஸ்.வி.ஜி.வி. பள்ளியில் 100 சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வு: காரமடை எஸ்.ஆா்.எஸ்.ஐ. பள்ளி 100% தோ்ச்சி

கூடலூா் முஸ்லீம் ஆதரவற்றோா் இல்லத்தில் பிராா்த்தனைக் கூட்டம்

நட்சத்திர விடுதிகளில் தங்கிவிட்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றியவா் கைது

SCROLL FOR NEXT