தமிழ்நாடு

மனித குலத்துக்கு இந்தியா வழங்கியுள்ள சிறந்த பரிசு யோகா: மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு

DIN

மனித குலத்துக்கு இந்தியா வழங்கி இருக்கும் மிகச் சிறந்த பரிசு யோகா என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கூறினார்.
சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம் ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற 4-ஆவது சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தை வியாழக்கிழமை தொடங்கி வைத்து அவர் பேசியது:
மனிதர்களின் உடல், மனம், ஆன்மா ஆகியவற்றை இணைக்கும் பயிற்சியாக யோகா திகழ்கிறது என்பதை நமது முன்னோர்கள் கண்டறிந்து அன்றாட வாழ்வில் கடைப்பிடித்து, மகிழ்ச்சி, ஆரோக்கியமான வாழ்க்கையை மேற்கொண்டனர். 
உடற்பயிற்சிகளில் மிகச் சிறந்ததாகத் திகழும் யோகா பயிற்சியை எந்த இடத்திலும் எப்போதும் செலவில்லாமல் மேற்கொண்டு உடல்நலத்தைப் பேண முடியும். உடல் நலத்தை பேணிக் காக்க அனைவரும் யோகா பயிற்சியை தினமும் தவறாமல் செய்யும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையில் விடுத்த வேண்டுகோளை ஏற்று, ஜூன் மாதம் 21 ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா.சபை கடந்த 2015-ஆம் ஆண்டு அறிவித்தது. இந்த இன்றியமையாத அறிவியல் பயிற்சியை உலகளாவிய அளவில் மனித குலத்துக்கு வழங்க பிரதமர் நரேந்திர மோடி உறுதுணை புரிந்துள்ளார் என்றார் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு.
பின்னர் அவர் மாணவர்களுடன் இணைந்து யோகாசனப் பயிற்சிகளைச் செய்தார். தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன், சாய்ராம் கல்விக்குழும தலைமை செயல் அலுவலர் சாய்பிரகாஷ் லியோமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

SCROLL FOR NEXT