முகப்பு
தமிழ்நாடு

கருணாநிதியிடம் வாழ்த்துப் பெற்றார் மு.க. ஸ்டாலின்

65ஆவது பிறந்த நாளையொட்டி தந்தை கருணாதியிடம், மு.க. ஸ்டாலின் வாழ்த்துப் பெற்றார். 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

65ஆவது பிறந்த நாளையொட்டி தந்தை கருணாதியிடம், மு.க. ஸ்டாலின் வாழ்த்துப் பெற்றார். 

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 65ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பெரியார் நினைவிடத்திலும் அவர் மரியாதை செலுத்தினார். அப்போது மு.க.ஸ்டாலினுடன் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா உள்ளிட்டோர் உடனிருந்தார். 

மேலும் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு தலைவர்கள் நேரிலும், சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, புதுவை முதல்வர் நாராயணசாமி, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர், குமரி ஆனந்தன், வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவரும், தந்தையுமான கருணாநிதியை சந்தித்து மு.க.ஸ்டாலின் வாழ்த்துப் பெற்றார். 

முழு கட்டுரையைப் படிக்க →