சென்னை: தனது கொள்ளுப் பேரன் பேட்டிங் செய்ய, உட்கார்ந்த நிலையில் அவனுக்கு திமுக தலைவர் கருணாநிதி பந்தை வீசி விளையாடும் விடியோ வெளியிடப்பட்டுள்ளது.
தீவிர அரசியலில் இருந்து வந்த திமுக தலைவர் கருணாநிதி வயோதிகம் காரணமாக ஏற்பட்ட உடல் நலக் குறைவால் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
அவ்வப்போது அரசியல் கட்சித் தலைவர்கள் கருணாநிதியை சந்தித்துப் பேசும் புகைப்படங்கள் வெளியாகி வந்த நிலையில், கருணாநிதி பந்து வீசும் விடியோ தற்போது வெளியாகி திமுக தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மகன் மு.க. தமிழரசு, மகள் செல்வி ஆகியோர் உற்சாகமளிக்க, கொள்ளுப் பேரன் மகிழன் பேட்டிங் செய்ய, கருணாநிதி பந்து வீசும் காட்சிகள் அந்த விடியோவில் இடம்பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.