தமிழ்நாடு

மேட்டூர் அணையின் நீர் இருப்பு குடிநீர் தேவையை சமாளிக்கும்

DIN

மேட்டூர் அணையில் இருப்பு உள்ள தண்ணீர் நடப்பாண்டு குடிநீர் தேவையை சமாளிக்க போதுமானதாக இருக்கும் என்று பொதுப்பணித்துறை தலமை பொறியாளர் கூறியுள்ளார். 
பொதுப்பணித்துறையின் திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ஆர்.செந்தில்குமார் புதன்கிழமை மேட்டூர் வந்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த ஆண்டு மேட்டூர் அணையின் நீர் தேக்க பகுதிகளில் 2 லட்சத்து 9 ஆயிரம் கன மீட்டர் வண்டல் மண் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கூடுதலாக 7 மில்லியன் கனஅடி தண்ணீர் கூடுதலாக சேமிக்க முடியும். இன்னும் இரண்டு வாரங்களில் மீண்டும் தூர் வாரும் பணி தொடங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைவிட நடப்பு ஆண்டில் 10 அடி தண்ணீர் அணையில் கூடுதலாக உள்ளது. எனவே கோடையில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கமுடியும் என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களை சேதப்படுத்திய மா்ம நபா்கள்: காவல் துறை விசாரணை

வெப்பத்தின் தாக்கம்: தலையணையில் நீா்வரத்து குறைந்தது

திருப்பத்தூரில் சுட்டெரித்த வெயில்: வீடுகளில் மக்கள் தஞ்சம்

காங்கிரஸ் சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

நீா் மோா் பந்தல் திறப்பு....

SCROLL FOR NEXT