தமிழ்நாடு

பெண்களுக்கான சம ஊதியம் கானல் நீராகவே உள்ளது

DIN

ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு சம ஊதியம் என்பது கானல் நீராகவே உள்ளது என்று மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
சரிபாதி பெண்கள் வாழும் நாட்டில் 33 சதவீத இடஒதுக்கீட்டுக்காக இன்னும் போராடத்தான் வேண்டியுள்ளது. சமூகமும், அரசும் வேலைக்குச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளைச் சற்று தள்ளி நின்றே வேடிக்கைப் பார்க்கின்றன.
செவ்வாய்க்கிரகத்துக்கு செயற்கைக்கோள் அனுப்பும் 21 -ஆம் நூற்றாண்டில்தான் பெண் சிசுக் கொலைகளும், வரதட்சிணைக் கொடுமைகளும், பாலியல் வன்கொடுமைகளும் தொடர்கதையாக உள்ளன. ஒரே வேலைக்கு சம ஊதியம் என்பது இன்னும் கானல் நீராகத்தான் உள்ளது. இனிவரும் நாள்களாவது மகளிருக்கான தேவைகள் நிறைவேறும் நாள்களாக இருக்கட்டும் என கனிமொழி தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

SCROLL FOR NEXT