தமிழ்நாடு

பிறக்கும்போதே ஒலிப் பெருக்கியுடன் பிறந்தவர் வைகோ: அமைச்சர் ஜெயக்குமார்

DIN

பிறக்கும்போதே ஒலிப் பெருக்கியுடன் பிறந்தவர் வைகோ என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியளார்களிடம் கூறுகையில், சாதிரீதியான கேள்விகளை பள்ளிப்பருவத்தில் திணிப்பதை ஏற்கமுடியாது. பள்ளிக் கல்வித்துறை இந்த விவகாரத்தை கவனித்து கொள்ளும். குற்றப்பின்னணி கொண்ட யாரும் அதிமுகவில் கிடையாது. மற்ற கட்சிகளில்தான் இருக்கிறார்கள். 

சுற்றுலாவை மேம்படுத்தும் மலையேற்ற பயிற்சிக்கு தடைவிதிக்க முடியாது. ஆனால், மலையேற்ற பயிற்சிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். தினகரன் உட்பட யாரும் கட்சி தொடங்கலாம், அதனால் அதிமுகவுக்கு பாதிப்பில்லை. ஆனால் அதிமுகவின் கட்சி கொடியையும், சின்னத்தையும் யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. 

புயல் குறித்த தகவலை அறியாத மீனவர்களுக்கு விமானம் மூலமாக தகவல் வழங்கி வருகிறோம். பிறக்கும்போதே ஒலிப் பெருக்கியுடன் பிறந்தவர் வைகோ, அவர் வீரவசனம் பேசுவதில் வல்லவர். 

ஊடகங்களில் பேசுவதை ஜெயக்குமார் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அண்மையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT