தமிழ்நாடு

மதவெறுப்பை காட்டி அரசியல் செய்யக் கூடாது: தமிழிசை சௌந்தரராஜன்

DIN

தமிழகத்தில் மதவெறுப்பை வைத்து அரசியல் செய்ய திமுக செயல் தலைவர் ஸ்டாலின் போன்றவர்கள் நினைக்கின்றனர் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
காட்பாடியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் மதவெறுப்பை வைத்து அரசியல் செய்ய ஸ்டாலின் போன்றவர்கள் நினைக்கின்றனர். ரதத்தை தடுப்பது இந்து மத நம்பிக்கை உள்ளவர்கள் மீதும் தொடுக்கப்படும் தாக்குதலாகும். இந்த விவகாரத்தை வைத்து போராட்டம் நடத்துவது மிக தவறான ஒன்று. 
இந்த ரதத்தை நல்லிணக்க விரோத தேர் என்று திருமாவளவன் கூறுகிறார். எந்த வகையில் இது நல்லிணக்கத்துக்கு விரோதமானது என அவர்தான் கூற வேண்டும். மேலும், அவர் தான் நல்லிணக்கத்துக்கு விரோதமாக உள்ளார். 
மதத்தை வைத்து பிரித்தாளும், அரசியல் செய்ய வேண்டாம் என ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். 
கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா பல பிரிவினை முயற்சிகளை மேற்கொண்டு, அதன் மூலம் வாக்குகளைப் பெற நினைக்கிறார். பிரிவினைவாதமோ, பிரிவினை கருத்தையோ மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சந்திரபாபு நாயுடு சுயநலத்துக்காக பாஜக கூட்டணியை விட்டு வெளியே சென்றுள்ளார். 
கொடுக்கப்பட்ட நிதியை அவர் முறையாகப் பயன்படுத்தாமல் ஊழல் செய்துள்ளார். இதை மறைப்பதற்கே அவர் கூட்டணியிலிருந்து வெளியேறியுள்ளார். அவரது விலகல் பாஜகவை பலப்படுத்துவதாகவே அமையும். அதை பலமாகவே பார்க்கிறோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT