முகப்பு
தமிழ்நாடு

36 ஆயிரம் கோயில்களில் உள்ள கடைகளை அகற்றுமாறு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

36 ஆயிரம் கோயில்களில் உள்ள கடைகளை 8 வாரத்துக்குள் அகற்ற சுற்றறிக்கை அனுப்புமாறு உயர் நீதிமன்ற மதுரை கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 22 மார்ச், 2018 at 2:13 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:02 PM

சமீபத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் செயல்பட்டு வந்த கடைகளில் ஏற்பட்ட தீ விபத்து அந்த மண்டபம் முழுவதும் பரவியது. இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் கோயில் வளாகங்களில் உள்ள கடைகளை உடனடியாக அகற்றுமாறு கோரிக்கைகள் எழுந்தன.

இதையடுத்து பழனி அடிவாரத்தில் உள்ள மங்கம்மாள் சத்திரத்தில் உள்ள கடைகளை 15 நாட்களுக்குள் அகற்றுமாறு கடந்த பிப்ரவரி 21-ந் தேதி பழனி கோயில் அறநிலையத்துறை இணை ஆணையர் உத்தரவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அங்கு கடை நடத்தி வந்த 7 பேர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கு மீதான விசாரணை வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, கோயில் வளாகம் முழுவதும் தரமாக பராமரிக்க வேண்டியது அதிகாரிகளின் கடமை. தமிழக அறநிலையத்துறைக்குச் சொந்தமான 36 ஆயிரம் கோயில்களில் செயல்பட்டு வரும் வணிக ரீதியிலான கடைகளை 8 வாரத்துக்குள் அகற்ற வேண்டும். இதற்கான சுற்றறிக்கையை அறநிலையத்துறை செயலர் மற்றும் ஆணையர் அனுப்ப வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.