தமிழ்நாடு

விருகம்பாக்கம் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட காவலாளி நேபாளத்தில் கைது! 

சென்னையை அதிர்ச்சிக்குள்ளாக்கிய விருகம்பாக்கம் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட காவலாளி சபீல் லால் நேபாளத்தில் சர்வதேச காவல்துறையால் கைது செய்யப்பட்டார். 

DIN

சென்னை: சென்னையை அதிர்ச்சிக்குள்ளாக்கிய விருகம்பாக்கம் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட காவலாளி சபீல் லால் நேபாளத்தில் சர்வதேச காவல்துறையால் கைது செய்யப்பட்டார். 

சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள ஐஓபி வங்கியில் கடந்த சனி, ஞாயிறு விடுமுறையைப் பயன்படுத்தி, அதே வங்கியில் காவலாளியாகப் பணிபுரிந்து வந்த  சபீல் லால் சந்த் என்பவர் வங்கி லாக்கரை உடைத்து ரூ. 32 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் நகைகளுடன் மாயமானார்.

பின்னர் போலீஸார் நடத்திய தொடர் விசாரணையில் கொள்ளையில் காவலாளி சபில் லால் சந்த் மற்றும் அவரது மகன் திலூ ஈடுபட்டது தெரிய வந்தது. இருவரும் சொந்த ஊரான நேபாளம் தப்பிச் சென்றிருக்கலாம் என்ற எண்ணத்தில் போலீஸார் நேபாளத்திற்குச் சென்றனர். அதேசமயம் சர்வதேச காவல்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

அதேசமயம் சென்னையில் போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், இந்த வங்கிக் கொள்ளையில் கார் ஓட்டுநர் ரமேஷ் என்பவர் உட்பட 6 பேர் ஈடுபட்டது தெரிய வந்தது.

தற்பொழுது சர்வதேச காவல்துறையினர் மூலம் சபீல் லால் சந்த் சிக்கியுள்ளார். மற்ற நான்கு பேர் சிக்கவில்லை. கைது செய்யப்பட்ட அவர் விரைவில் சென்னைக்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனவைக் குடித்த மயக்கத்தில்... அயன்னா சாட்டர்ஜி!

ஏர் இந்தியா விபத்தில் உயிர்த் தப்பிய ரமேஷின் நிலை என்ன?

நிழலிலும் ஜொலிக்கிற நிரந்தர ஒளி... ஸ்வேதா குமார்!

பார்சிலோனாவில் இரண்டு நாள்கள்... ஆஷிகா ரங்கநாத்!

“தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் மு.க.ஸ்டாலின்!” திமுகவில் இணைந்த மனோஜ் தங்கராஜ் பேட்டி!

SCROLL FOR NEXT