முகப்பு
தமிழ்நாடு

திமுகவின் அனைத்துக் கட்சி கூட்டம்: 17-க்கு மாற்றம்

காவிரி விவகாரம் தொடர்பாக, திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செவ்வாய்க்கிழமை (மே 15) நடைபெற இருந்த அனைத்துக் கட்சி கூட்டம் மே 17-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

Updated On : 15 மே, 2018 at 1:35 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

காவிரி விவகாரம் தொடர்பாக, திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செவ்வாய்க்கிழமை (மே 15) நடைபெற இருந்த அனைத்துக் கட்சி கூட்டம் மே 17-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
காவிரி விவகாரம் தொடர்பாக மு.க.ஸ்டாலின் தலைமையில் மே 15-ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க இருந்தன. காவிரி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை அளிக்கப்படும் தீர்ப்புக்கேற்ப அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆராய்வதற்காக இந்தக் கூட்டம் கூட்டப்பட்டிருந்தது. ஆனால், உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வரைவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டதோடு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டு, மீண்டும் மே 16-ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. இதன் காரணமாக திமுகவின் அனைத்துக் கட்சிக்கூட்டமும் ஒத்திவைக்கப்பட்டு, மே 17-ஆம் தேதி மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் கூட்டம் நடைபெற உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.