தமிழ்நாடு

அதிமுக அழுத்தம் காரணமாகவே காவிரி விவகாரத்தில் முன்னேற்றம்: செல்லூர் ராஜு

DIN

அதிமுக கொடுத்த அழுத்தம் காரணமாகவே காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். 
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியதாவது:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தேவையான அழுத்தம் அதிமுக சார்பில் கொடுக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசன் கூட்டும் அனைத்துக் கட்சி கூட்டம் பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை. 
தமிழகத்தில் உள்ள அனைத்துத் திட்டங்களையும் ஜெயலலிதா இருந்தால் எப்படி நிறைவேற்றுவாரோ அதேபோல முதல்வர் சிறப்பாக நிறைவேற்றி வருகிறார். குறிப்பாக மக்களை எளிதில் சந்திக்கும் முதல்வராக எடப்பாடி கே.பழனிசாமி இருக்கிறார் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்துக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மறைந்த காவலா் குடும்பத்துக்கு நிதியுதவி

சவுடு மண் குவாரியிலிருந்து தினமும் 10 லாரிகளில் மட்டுமே மண் அள்ள அறிவுறுத்தல்

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து: ரூ.4,956 கட்டணமாக நிா்ணயம்

SCROLL FOR NEXT