தமிழ்நாடு

நெருப்பு பறக்க எழுதிய மெர்க்குரிப் பூ அவர்: பாலகுமாரனுக்கு நடிகர் கமல் புகழாரம் 

நெருப்பு பறக்க எழுதிய மெர்க்குரிப் பூ அவர் என்று மறைந்த எழுத்தாளர் பாலகுமாரனுக்கு நடிகர் கமல் புகழாரம் சூட்டியுளளார்.

DIN

சென்னை: நெருப்பு பறக்க எழுதிய மெர்க்குரிப் பூ அவர் என்று மறைந்த எழுத்தாளர் பாலகுமாரனுக்கு நடிகர் கமல் புகழாரம் சூட்டியுளளார்.

எழுத்துச் சித்தர் என்று வாசகர்களால் புகழப்பட்ட எழுத்தாளர் பாலகுமாரன் கடந்த வாரம் உடல்நலக் குறைவால் சென்னையில் மரணமடைந்தார். அவரது மரணத்தின் பொழுது அவரது நண்பரான நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் தென் மாவட்ட சுற்று பயணத்திலிருந்தார். எனவே அப்பொழுது அங்கிருந்து தனது இரங்கலைத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நெருப்பு பறக்க எழுதிய மெர்க்குரிப் பூ அவர் என்று மறைந்த எழுத்தாளர் பாலகுமாரனுக்கு நடிகர் கமல் புகழாரம் சூட்டியுளளார்.

சென்னை திரும்பியிருந்த கமல் திங்களன்று மைலாப்பூரிலுள்ள பாலகுமாரன் இல்லத்திற்கு சென்றிருந்தார். அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது:

நெருப்பு பறக்க எழுதிய மெர்க்குரிப் பூ அவர். சிறந்த எழுத்தாளர். நானும் அவரும் நிறைய கதைகளைப் பேசிக் கொண்டிருப்போம். அவரை சினிமாவில் வந்து பணியாற்றுமாறு நான்தான் முதலில் வற்புறுத்தினேன். அவர் பின்னர் பாலசந்தர் மற்றும் பாக்யராஜ் ஆகியோரிடம் பணியாற்றினார். நானும் அவரும் சேர்ந்து கூட ஒரு கதை எழுதினோம்.

இவ்வாறு கமல் தெரிவித்தார் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாம்பன் மீனவர்கள் 10 பேர் கைது!

ஆற்காடு நகராட்சி அலுவலகத்தில் விடியவிடிய லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை: ரூ.79,000 பறிமுதல்

திருப்பூர் அருகே அதிமுக எம்எல்ஏ தோட்டத்தில் எஸ்.ஐ. வெட்டிக் கொலை!

சிறுமி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை!

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத் திட்ட உதவிகள் வழங்கினாா் எம்எல்ஏ

SCROLL FOR NEXT