தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆலை ஊழியர் குடியிருப்புக்குத் தீவைத்த போராட்டக்காரர்கள்

DIN


தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய கிராம மக்கள், ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் குடியிருப்புக்குத் தீ வைத்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், அங்கிருந்த வாகனங்களுக்கும் தீ வைத்தனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்த போராட்டக்காரர்களை நோக்கி காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இதில் 2 பேர் உயிரிழந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனால், கடும் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், கும்பலாக, ஸ்டெர்லைட் ஆலை ஊழியர் குடியிருப்புக்குச் சென்று, குடியிருப்புகளுக்கு தீ வைத்தனர்.

தகவல் அறிந்து ஏராளமான தீயணைப்பு வீரர்கள் குடியிருப்புகளில் யாரேனும் சிக்கியிருக்கிறார்களா என்று தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆங்காங்கே பிரிந்திருந்த போராட்டக்காரர்கள், திடீரென ஒன்றுதிரண்டு ஒரே பகுதியில் சென்று போராட்டத்தில் ஈடுபடுவதால், அவர்களை தடுக்க முடியாமல் காவல்துறையினர் திணறி வருகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT