தமிழ்நாடு

ஸ்டெர்லைட் போராட்டம்: கிராம மக்களுக்கும் காவல்துறைக்கும் இடையே மோதல்

DIN


தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தடையை மீறி முற்றுகையிட முயன்ற கிராம மக்களுக்கும், அவர்களைத் தடுக்க முயன்ற காவல்துறைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி சுமார் 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால், கிராம மக்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.

அப்போது கிராம மக்களில் சிலர் காவல்துறையினர் மீது கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. போராட்டக்காரர்களை கலைக்க காவல்துறையினர் முயன்ற போது, இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

காவல்துறை வாகனம் ஒன்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களால் சேதப்படுத்தப்பட்டது. தடுப்புகளை அமைத்து போராட்டக்காரர்களை தடுக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கசங்கிய ஆடையும் உலகைக் காக்கும்!

கோயில் விழா நடத்த இடம் ஒதுக்காமல் பூங்கா அமைத்ததற்கு எதிா்ப்பு

சாலையோர தடுப்பில் பைக் மோதி விபத்து: ஐடிஐ மாணவா் பலி

தொழிலாளியை வீட்டுக்குள் அடைத்து மிரட்டல் விடுத்த 5 போ் கைது

கலுங்குவிளை கூட்டுறவு கடன் சங்கத்தில் துணைப் பதிவாளா் விசாரணை

SCROLL FOR NEXT