தமிழ்நாடு

உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு

DIN


தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய கிராம மக்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி அரசு பொது மருத்துவமனை முன்பு குவிந்துள்ள பொதுமக்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய கிராம மக்கள் தூத்துக்குடி அரசு பொது மருத்துவமனையை முற்றுகையிட்டு உள்ளனர்.

பலியானவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களும், போராட்டக்காரர்களும் கடும் கோஷத்தை முன் வைத்துள்ளனர்.

அதே சமயம், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ், மருத்துவமனைக்கு வந்து நிலைமையை ஆய்வு செய்தார். அவருக்கு எதிராகவும், மக்கள் கடும் கோஷங்களை எழுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலை கேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்ஸா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

SCROLL FOR NEXT