தமிழ்நாடு

கடவுளே... எங்களைக் காப்பாற்று: கமல் மீதான வழக்குப் பதிவு குறித்து விஷால் 

DIN

சென்னை: கடவுளே... எங்களைக் காப்பாற்று என்று கமல் மீதான வழக்குப் பதிவு குறித்து நடிகர் விஷால் கருத்துத் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர்ந்து நடந்து வரும் போராட்டமானது செவ்வாயன்று நூறாவது நாளை எட்டியது. செவ்வாய் காலையில் இருந்தே தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவதாக அறிவித்திருந்த போராட்டக்காரர்கள் பெருமளவில் குவிந்தனர். தடைகளை மீறி ஆட்சியர் அலுவலகத்தை அவர்கள் முற்றுகையிட்டதால், காவலதுறையினர் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் செவ்வாயன்று 11 பேரம், இன்று ஒருவரும் என மொத்தம் 12 பேர் மரணமடைந்தனர். படுகாயமடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை, நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் புதனன்று சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். தூத்துக்குடியில் 144 தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கமல்ஹாசன் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தது சட்டத்திற்குப் புறம்பானது என்று கூறி அவர்மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்நிலையில் கடவுளே... எங்களைக் காப்பாற்று என்று கமல் மீதான வழக்குப் பதிவு குறித்து நடிகர் விஷால் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

வினோதமான விஷயம் ஒன்றைக் கேள்விப்பட்டேன். தூத்துக்குடியில் தாக்குதலுக்கு ஆளான அப்பாவிப் பொதுமக்களைச் சந்தித்ததற்காக கமல்ஹாசன் சார் மீது வழக்குப்பதிவா? என்ன கொடுமை. இது உண்மை என்றால், வெளிப்படையான அட்டூழியம். நடிகர்/அரசியல்வாதி/சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர் அங்கு சென்று ஆறுதல் கூறாமல் வேறு யார் செல்வது? கடவுளே... எங்களைக் காப்பாற்று!

இவ்வாறு அவர் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

SCROLL FOR NEXT