தமிழ்நாடு

முதுநிலை மருத்துவம்: முதல்கட்ட கலந்தாய்வு இன்று நிறைவு

DIN

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு வியாழக்கிழமை (மே 24) நிறைவடைய உள்ளது. எம்.டி., எம்.எஸ்., எம்.டி.எஸ்., முதுநிலை பட்டயம் ஆகிய படிப்புகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் கடந்த மே 19-ஆம் தேதி தொடங்கியது. அரசு மருத்துவக் கல்லூரி இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
67 இடங்கள்: புதன்கிழமை நடைபெற்ற கலந்தாய்வுக்கு 877 பேர் அழைக்கப்பட்டனர், 489 பேர் பங்கேற்றனர். கலந்தாய்வின் முடிவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 34 இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 33 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் 67 இடங்கள் நிரம்பின.
இன்றைய கலந்தாய்வு: அரசு பல் மருத்துவக் கல்லூரி, ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி, தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு முதுநிலை பல் மருத்துவ இடங்களுக்கு வியாழக்கிழமை (மே 24) காலை 9 மணிக்கு கலந்தாய்வு தொடங்க உள்ளது. தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு முதுநிலை பல் மருத்துவ இடங்களுக்கு பிற்பகல் 2 மணிக்கு கலந்தாய்வு நடைபெறும். முதல் கட்ட கலந்தாய்வு வியாழக்கிழமை நிறைவு பெறும் நிலையில், முது நிலை படிப்புகளுக்கு நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு மே 25-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

நாலுமாவடியில் பெண்களுக்கான இலவச கபடி பயிற்சி முகாம்: மே 9இல் தொடக்கம்

SCROLL FOR NEXT