தமிழ்நாடு

மொத்த தேர்ச்சி சதவீதங்களுடன் 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவு விவரங்கள்

Raghavendran

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் புதன்கிழமை காலை வெளியிடப்பட்டன. இதில் மொத்தம் 94.5 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். 

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தமிழகம், புதுச்சேரியில் கடந்த மார்ச் 16 -ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 -ஆம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 10 லட்சத்து 1,140 மாணவர்கள் எழுதினர். தேர்வு முடிவுகள், 

www.tnresults.nic.in 
www.dge1.tn.nic.in 
www.dge2 
ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

இதில் மாணவிகள் 96.4 சதவீதமும், மாணவர்கள் 92.5 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

மேலும், பள்ளி மாணவர்கள் சமர்ப்பித்த செல்லிடப்பேசி எண்ணுக்கும் குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவுகள் மதிப்பெண்களுடன் அனுப்பி வைக்கப்படும்.

மொத்த தேர்ச்சி சதவீதங்களுடன் 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவு விவரங்கள்

மொத்தம் 5,456 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. சிவகங்கை, ஈரோடு, விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன. இவற்றின் சதவீத விவரம் பின்வருமாறு:

  • சிவகங்கை மாவட்டம்: 98.5 சதவீதத்துடன் முதலிடம்
  • ஈரோடு மாவட்டம்: 98.38 சதவீதத்துடன் இரண்டாமிடம்
  • விருதுநகர் மாவட்டம்: 98.26 சதவீதத்துடன் மூன்றாமிடம்
  • கன்னியாகுமரி: 98.07 சதவீதத்துடன் நான்காமிடம்
  • ராமநாதபுரம்: 97.94 சதவீதத்துடன் ஐந்தாமிடம்

மொத்த மாணவ, மாணவியர்கள் பாட வாரியாக தேர்ச்சி விகிதம்:

  • மொழிப்பாடம் 96.42
  • ஆங்கிலம் 96.50
  • கணிதம் 96.18
  • அறிவியல் 98.47
  • சமூக அறிவியல் 96.75
  • சமூக அறிவியல் 96.75

பள்ளி வாரியாக தேர்ச்சி விகிதங்களின் சதவீதம்:

  • அரசுப் பள்ளிகள்: 91.36 சதவீதம்
  • அரசு உதவி பெறும் பள்ளிகள்: 94.36 சதவீதம்
  • மெட்ரிக் பள்ளிகள்: 98.79 சதவீதம்
  • இருபாலர் பள்ளிகளில் பயின்றோர்: 94.81 சதவீதம்
  • பெண்கள் பள்ளிகள்: 96.27 சதவீதம்
  • ஆண்கள் பள்ளிகள்: 87.54 சதவீதம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்!

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு!

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

SCROLL FOR NEXT