தமிழ்நாடு

உதகை கோடை விழா: ஓவியக் கண்காட்சி தொடக்கம்

DIN

உதகை கோடை விழாவின் ஒரு பகுதியாக 8 நாள் ஓவியக் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது.

உதகையில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் மெக்கன்ஸ் கட்டடக் கலை கல்லூரியின் சார்பில் நடத்தப்படும் இந்த ஓவியக் கண்காட்சியை, தமிழக அரசின் ஓய்வுபெற்ற கலை, பண்பாட்டுத் துறை முதன்மைச் செயலர் கண்ணன் தொடக்கி வைத்தார். 
பழங்குடியினரின் கலைத்திறனை ஊக்குவிப்பதற்காகவும், அழியும் நிலையிலுள்ள கலைகளுக்கு உயிர் கொடுக்கும் வகையிலும், சுற்றுலாவை மேம்படுத்துவதற்காகவும் நான்காவது ஆண்டாக இக்கண்காட்சி நடத்தப்படுவதாக இக்கல்லூரியின் தலைவர் என்.முரளி குமரன் 
தெரிவித்தார்.
இக்கண்காட்சியில் சுமார் 75 ஆண்டுகளுக்கு முந்தைய தஞ்சாவூர் ஓவியங்கள், மெக்கன்ஸ் கல்லூரி மாணவ, மாணவியரின் படைப்புகள், பழங்குடியினரின் கலைப் பொருள்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. அதேபோல, தோடர் இன மக்களின் எம்பிராய்டரி, கோத்தர் இனமக்களின் மண் பாண்டம் செய்தல் மற்றும் குறும்பர் இனத்தாரின் ஓவியங்கள் ஆகியவை குறித்து கண்காட்சியிலேயே செயல்முறை விளக்கம் 
அளிக்கப்படுகிறது.
இக்கண்காட்சியில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தத்ரூபமான ஓவியங்களும் இடம்பெற்றுள்ளன. மே 31 -ஆம் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சியைக் காண கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை.
தொடக்க விழா நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் செயலர் கண்ணன், "அழிந்து வரும் கலைகளைப் பாதுகாக்கும் முயற்சியில் ஆங்கிலேயர் கால கட்டடக் கலையை மீண்டும் உயிர்ப்பிப்பது குறித்தும், தமிழகத்தில் உள்ள பழங்கால கட்டடக் கலை மற்றும் அதன் நுணுக்கங்கள் குறித்தும் தற்போதைய இளைய சமுதாயத்தினருக்கு எடுத்துக்கூற வேண்டும்' என்றார்.
நிகழ்ச்சியில் கல்லூரியின் இயக்குநர் ஜி.சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: குலசேகரம் எஸ்.ஆா்.கே.பி.வி. பள்ளி சிறப்பிடம்

வடவூா்பட்டி கோயிலில் நாளை கொடை விழா

ராஜஸ்தானை வென்றது டெல்லி

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: பாஜக நிா்வாகி வீட்டில் சிபிசிஐடி போலீஸாா் சோதனை

காயாமொழி பள்ளி சிறப்பிடம்

SCROLL FOR NEXT