தமிழ்நாடு

முழு அடைப்பு எதிரொலி: கேரளாவிலிருந்து வரும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்

DIN

முழு அடைப்பு காரணமாக கேரளாவிலிருந்து வரும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தைக் கண்டித்தும் அதிமுக அரசு பதவி விலகக் கோரியும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இன்று முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, திராவிடர் கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, அவையும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன.

இந்நிலையில் முழு அடைப்பு காரணமாக கேரளாவிலிருந்து வரும் அரசுப் பேருந்துகள் தமிழக-கேரள எல்லையான கன்னியாகுமரின் களியக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT