தமிழ்நாடு

முதுநிலை மருத்துவம்: "அகில இந்திய இடங்கள் கிடைக்காவிடில் கட்டணம் திரும்ப அளிக்கப்படும்'

தினமணி

முதுநிலை மருத்துவப் படிப்பில் அகில இந்திய இடங்கள் கிடைக்காதோருக்கு அவர்கள் செலுத்திய கல்விக் கட்டணம் திரும்ப அளிக்கப்படும் என்று மத்திய சுகாதார சேவைகள் இயக்ககம் (டிஜிஹெச்எஸ்) அறிவித்துள்ளது.
 இது தொடர்பாக சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு: முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான முதல்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட அகில இந்திய கலந்தாய்வில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடங்கள் கிடைக்கப் பெறாதவர்களுக்கு, அவர்கள் செலுத்திய கல்விக் கட்டணத்தை திரும்ப அளிக்கும் நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன. மாணவர்கள் குறிப்பிட்டுள்ள வங்கிக் கணக்கிலேயே பணம் செலுத்தப்பட்டு வருகிறது.
 புணே ராணுவ மருத்துவக் கல்லூரி, மத்திய மருத்துவ பல்கலைக்கழகம், தனியார் மருத்துவக் கல்லூரிகள் ஆகியவற்றில் இடம் கிடைக்காத மாணவர்களுக்கும் கூடிய விரைவில் கல்விக் கட்டணம் திரும்ப அளிக்கப்படும். இதுதொடர்பாக ஏதேனும் சந்தேகம், புகார்கள் இருந்தால் ச்ண்ய்ஹய்ஸ்ரீங்ம்ஸ்ரீஸ்ரீ1ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீர்ம் என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 இடங்கள் ஒப்படைப்பு: முதுநிலை மருத்துவப் படிப்பில் அகில இந்திய இடங்களுக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு மே 19-ஆம் தேதி நிறைவடைந்தது. இறுதிக்கட்ட கலந்தாய்வில் பங்கேற்று தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடங்களைப் பெற்றவர்கள் அந்தந்த கல்லூரிகளில் சனிக்கிழமைக்குள் சென்று சேர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
 அதனையடுத்து கலந்தாய்வில் நிரம்பாத இடங்கள், கலந்தாய்வில் இடங்களைப் பெற்றவர்கள் கல்லூரியில் சேராத இடங்கள் ஆகிய அனைத்தும் அந்தந்த தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு சனிக்கிழமை மாலை ஒப்படைக்கப்பட்டது.
 மீதம் உள்ள இடங்களை நீட் தேர்வின் அடிப்படையில் கல்லூரி நிர்வாகம் நிரப்பிக் கொள்ளலாம். கலந்தாய்வு நடைமுறைகள் அனைத்தும் மே 31-ஆம் தேதிக்குள் நிறைவடைய வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை

கிருஷ்ணகிரி அணையில் செத்து மிதக்கும் மீன்கள்

பிரதோஷ சிறப்பு வழிபாடு

பரமத்தி வேலூா் ஏலச்சந்தையில் வெற்றிலை விலை உயா்வு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

SCROLL FOR NEXT