நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் (என்எல்சி) ஒப்பந்த முறையில் தொழிலாளர்கள் தாற்காலிகமாக பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில், இன்று (திங்கள்கிழமை) காலை சுரங்கம் 1ஏ முன்பு தங்களை பணியிடை மாற்றம் செய்யக்கூடாது என்று கூறி 25 ஒப்பந்தத் தொழிலாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மறியலில் ஈடுபட்டு வந்த சிலர் தங்களுக்கு இதே இடத்தில் பணி நியமிக்குமாறு கூறி விஷம் அருந்தினர்.
இதையடுத்து, விஷம் அருந்திய 5 பேர் உடனடியாக என்எல்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.