தமிழ்நாடு

திருவள்ளூர் வங்கி கொள்ளை: ஊழியர் உட்பட மூவர் கைது; நகைகள் மீட்பு

திருவள்ளூர் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் நகைகளை கொள்ளையடித்த சம்பவத்தில் வங்கி ஊழியர் உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

DIN

திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் ரூ.6 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. 2 நாட்கள் விடுமுறை தினத்தை அடுத்து நேற்று (திங்கள்கிழமை) வங்கி திறக்கப்பட்ட போது வங்கியில் உள்ள பூட்டுகள் உடைக்கப்பட்டும், கள்ளச் சாவிகள் போட்டும் திறக்கப்பட்டிருந்தது. அதில், உள்ள நகைகள் கொள்ளை போனதை கண்டு வங்கி ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

இதுகுறித்து கிடைத்த தகவலை அடுத்து போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த போலீஸார் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். 

இந்நிலையில், இந்த கொள்ளை சம்பவத்தில் வங்கி ஊழியர் உட்பட 3 பேரை போலீஸார் இன்று கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 32 கிலோ நகைகளையும் போலீஸார் மீட்டனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீஸார் அந்த மூன்று பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 2

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 1

இன்டர்நேஷ்னல் பீர் டே... திவ்ய பிரபா!

நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட தொடக்க விழா! மேடையில் M.L.A. - M.P. வாக்குவாதம்!

ஒரே ஓவரில் 45 ரன்கள்... 43 பந்தில் 153 ரன்கள் குவித்த ஆப்கன் வீரர்!

SCROLL FOR NEXT