தமிழ்நாடு

பாம்பன், தூத்துக்குடி மற்றும் நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு 

DIN

சென்னை: இந்தியாவின் மேற்கு-தென்மேற்கு கடல் பகுதியில் புயல் உருவாகி உள்ளதன் காரணமாக தமிழகத்தில் கடலூர், பாம்பன், தூத்துக்குடி மற்றும் நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

மியான்மர் அருகே மேற்கு-தென்மேற்கு கடல் பகுதியில் புயல் உருவாகி உள்ளது.  இது மெதுவாக நகர்ந்து இன்றிரவு கரையை கடக்க உள்ளது.  இதனால் இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும்.  இந்த புயலால் மியான்மர் கடலோர பகுதிகளில் பலத்த காற்று மற்றும்  கனமழை பெய்வதற்கான சாத்தியம் உள்ள நிலையில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதேபோன்று கேரள மற்றும் கர்நாடக கடலோர பகுதிகளில் நாளை கனமழை பெய்ய கூடும் என்றும் வானிலை ஆய்வு மைய தகவல் தெரிவிக்கின்றது.

இந்நிலையில் தமிழகத்தில் கடலூர், பாம்பன், தூத்துக்குடி மற்றும் நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது..

இதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகங்களிலும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

கோடைகால கிரிக்கெட் போட்டி தொடக்கம்

‘விளையாட்டு விடுதிக்கான தோ்வு போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்’

SCROLL FOR NEXT