ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு
ஸ்டெர்லைட் ஆலை மூடிய விவகாரத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை சுற்றுச்சூழல் துறையின் பரிந்துரையின்படி அந்த ஆலை நிரந்தரமாக மூடப்படுவதாக தமிழக அரசு திங்கள்கிழமை அரசாணை வெளியிட்டு அந்த ஆலைக்கு சீல் வைத்தது.
இதையடுத்து, தமிழக அரசின் ஆணையை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில், தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் வழக்கு தொடர்ந்தால் தங்களை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
முன்னதாக, உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி 2010-இல் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இதையடுத்து, 3 நாட்களில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து உச்சநீதிமன்றம் புதிய ஆணை பிறப்பித்தது. இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் செயல்படத் தொடங்கியது.
Advertisement
Advertisement
அதனால், இந்த முறை உச்சநீதிமன்றத்தால் தமிழக அரசு தரப்பு வாதங்களை கேட்காமல் புதிய ஆணையை பிறப்பிக்க முடியாது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.