தமிழ்நாடு

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்; சென்னைக்கு வாய்ப்பு குறைவு

தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழை நீடிக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

DIN


சென்னை: தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழை நீடிக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

மழை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது, காற்றழுத்தத் தாழ்வு நிலை மன்னார்வளைகுடா நோக்கி நகர்ந்து வருவதால், தெற்கு தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

காற்றழுத்தத் தாழ்வு நிலை தொடர்ந்து நகர நகர, தென் மாவட்டங்களுக்கான மழை வாய்ப்பு அதிகரிக்கும். 

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் கன மழை பெய்யும் வாய்ப்பு அதிகம். டெல்டா மாவட்டங்களுக்கு கூடுதலாக ஒரு நாள் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை அவ்வப்போது சூரியன் தலைகாட்டுவதும், திடீரென வானம் இருண்டு தூறுல் போடுவதுமாக உள்ளது. அதிகமாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் தான் மழைக்கான வாய்ப்பு அதிகம். ஆனால் தற்போதைய மழை நிலவரம் நாளையோடு சென்னைக்கு பிரியாவிடை கொடுக்கும் நேரம் வந்துவிட்டது. அடுத்து மழை வாய்ப்பு புதிதாக உருவானால்தான் உண்டு என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துறையூா், புத்தனாம்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை

பெண்ணுக்கு வீட்டில் பிரசவம்: கிராம செவிலியா் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை

மக்களின் அடிப்படைத் தேவைகளைத் தீா்க்க அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

சிவகங்கையில் இளைஞா் கொலை: 9 போ் கைது

தனியார் பல்கலை. சட்டத் திருத்த மசோதாவை தமிழக அரசு திரும்பப் பெற முடிவு செய்திருப்பது குறித்து...வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

SCROLL FOR NEXT