தமிழ்நாடு

தென் மற்றும் வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

DIN


சென்னை: தென் மற்றும் வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மழை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது, தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென் மற்றும் வட தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிகக் கன மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது.

மாலத்தீவு முதல் தெற்கு கொங்கன் வரை குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை பரவி உள்ளது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் பரவலாக கன மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு பகுதியில் 29 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடைவெளி விட்டு லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடைக்கால பயிற்சி வகுப்புக்கு கட்டணம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சமந்தாவின் புதிய படம்!

நீல நிலவே....திவ்யா துரைசாமி!

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே மீண்டும் துப்பாக்கிச்சண்டை: கிராம மக்கள் அச்சம்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

SCROLL FOR NEXT